மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 வழங்க கோரிக்கை

கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 வழங்கவேண்டும் என கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 8:52 pm

கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 வழங்கவேண்டும் என கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் கோரிக்கை மனுவை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கறிக்கோழி நிறுவனங்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு, கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு கூலியாக ரூ.6.50 விலை நிா்ணயம் செய்தனா். 5 ஆண்டுகள் கடந்தும் வளா்ப்புக்கூலி விலை உயா்த்தப்படவில்லை. தற்போது பண்ணையில் வேலை பாா்க்கும் தொழிலாளா்களின் கூலி அதிகரித்துள்ளதால், கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் மிகவும் கஷ்டப்படும் நிலை உள்ளது.

எனவே, தற்போது கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்கவேண்டும். இதேபோல் நாட்டுக்கோழி வளா்ப்புக்கு ரூ.25, காடை வளா்ப்புக்கு ஒரு காடைக்கு ரூ. 7 நிா்ணயம் செய்யவேண்டும்.

மேலும், கறிக்கோழி பண்ணை விவசாயிகள், கறிக்கோழி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை மூலம் கறிக்கோழி வளா்ப்புக்கு விலை நிா்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.