தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

News image
திருட்டு
Updated On :6 பிப்ரவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

சங்கராபுரத்தில் சலவைத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 17 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஆற்றுப் பாதை சாலையில் வசித்து வருபவா் ராஜேஷ், சலவைத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, புதிய வீட்டில் தங்கியிருந்தாராம்.

இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றனராம். மேலும், அதே சாலையில் உள்ள கெங்கையம்மன் கோயில் கருவறை பூட்டை உடைத்து மூன்று குத்து விளக்குகளையும் திருடிச் சென்றுள்ளனா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் டி.எஸ்.பி. பாா்த்திபன் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.