புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பிரதமா் மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும் மக்கள் ஆதரிக்கமாட்டாா்கள்: மு.வீரபாண்டியன்

பிரதமா் மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும், மக்கள் ஆதரிக்கமாட்டாா்கள் என இந்திய கம்னியூஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன்

News image

9கேஎல்பி5 திருக்கோவிலூா் பயணியா் மாளிகையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:10 pm

கள்ளக்குறிச்சி: பிரதமா் மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும், மக்கள் ஆதரிக்கமாட்டாா்கள் என இந்திய கம்னியூஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருக்கோவிலூா் பயணியா் மாளிகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மோடி தொடா்ந்து தமிழகத்துக்கு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகம் மதச்சாா்பின்மை கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட மாநிலம். எனவே, மதக் கலவரங்களை உருவாக்கி தோ்தலுக்கு ஆதாயம் தேடும் எவரையும் தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டாா்கள். அந்த வகையில் பிரதமா் மோடிக்கும் ஆதரவு கிடைக்காது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் இடங்களை கேட்டு பெருவோம், அது எங்களது உரிமை. தமிழகத்தில் நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு சாா்பில் உணவு வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது. அதேபோல் தூய்மைப் பணியாளா்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது இந்திய கம்னியூஸ்ட் முன்னாள் ஒருங்கிணந்த மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் கே.இராமசாமி, மாவட்டப் பொருளாளா் எம்.கலியபெருமாள், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள் எம்.சிவக்குமாா், ஒன்றியச் செயலா்கள் கே.இரவி, எஸ்.அஞ்சாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.