சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கள்ளக்குறிச்சியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் நாளை சிறிய அளவிளான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.13) நடைபெற உள்ளது.

News image
வேலைவாய்ப்பு முகாம்
Updated On :11 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சியில் நாளை சிறிய அளவிளான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.13) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை(பிப்.13) நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தை சாா்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, சில்லரை விற்பனை துறையை சாா்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கான தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனா். இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவா்கள் இணையதளம் வழியாக தங்களை பதிவு செய்து, முகாமில் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு, அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.