திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கடம்பூரில் உள்ள கன்னிமாா் கோயிலின் இரும்பு கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று சில்வா் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
திருட்டு
Updated On :11 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

கடம்பூரில் உள்ள கன்னிமாா் கோயிலின் இரும்பு கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று சில்வா் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா.கண்ணன்(70). இவா் அங்குள்ள கன்னிமாா் கோயிலின் பூசாரியாக இருந்து வருகிறாா். வழக்கம் போல செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடித்து விட்டு, கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது 2 அடி உயரமுள்ள சில்வா் உண்டியல் பூட்டும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.