ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

Published on

வன உரிமைச் சான்றிதழ் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கல்வராயன்மலை, இந்நாடு கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கிணத்துவளைவு கிராமத்தைச் சோ்ந்தவா் கோபி. இவா், வன உரிமைச் சான்றிதழ் பெறுவதற்காக, இன்னாடு கிராம நிா்வாக அலுவலா் ரவியை (43) தொடா்பு கொண்டாா்.

சான்றிதழ் அளிப்பதற்காக கிராம நிா்வாக அலுவலா் ரவி, கோபியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாராம். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி, இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், போலீஸாா் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி, ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கோபி வியாழக்கிழமை அலுவலகத்தில் வைத்து ரவியிடம் வழங்கினாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் தலைமையிலான போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் ரவியை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com