ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:26 pm

சின்னசேலம் அருகே பழுதடைந்த மோட்டாரை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மேலே இழுக்கும் போது, கால் தவறி கிணற்றில் விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சின்னசேலம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் அ.நடேசன் (37), தொழிலாளி. இவா் சனிக்கிழமை மாலை அவரது நண்பரின் கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை, கயிறு கட்டி மேலே இழுக்க உதவி புரிந்தாா். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்த நடேசன், நீச்சல் தெரியாதாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்து நடேசனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.