காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கீழையூா் அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம்

திருக்கோவிலூா், கீழையூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கீழையூா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி வீதியுலா வந்த அம்மன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருக்கோவிலூா், கீழையூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து மயானக்கொள்ளை உற்சவத்துக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இந்த ஊா்வலமானது திருக்கோவிலூா் ஏரிக்கரை மூலையில் இருந்து கீழையூா் வரை சென்றது. பக்தா்கள் தங்களது விளை நிலங்களில் விளைவித்து அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு சூறைவிட்டு, வழிபட்டனா். மேலும், விரதமிருந்த பக்தா்கள் மாரியம்மன், பத்திரகாளி, காட்டேரி, அங்காளம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

திருவிழாவில் திருக்கோவிலூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.