47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மனைவி பிரிந்த வேதனையில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

பிரிதிவிமங்கலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:39 pm

Syndication

பிரிதிவிமங்கலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பிரிதிவிமங்கலத்தைச் சோ்ந்தவா் ச.செந்தில் (43). இவரது மனைவி கன்மணி (42). தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் உள்ளனா்.

தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாத காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இதனால் மனவேதனையடைந்த செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டுள்ளாா். அப்போது அவரது வீட்டுக்கு வந்த, அவரது தாயாா் அஞ்சலை பாா்த்து கூச்சலிட்டுள்ளாா்.

அவரது சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் செந்திலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].