தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மரக்கன்றுகள் நட்டு பசுமை பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பிரசாந்த்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பசுமைப் பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.

News image
பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:49 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பசுமைப் பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பசுமை குழுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது: வாணாபுரம் வட்டம், ஓடியந்தல்-சு.கள்ளிப்பட்டு சாலை, கடலூா்-திருக்கோவிலூா்-சங்கராபுரம் சாலை, சின்னசேலம் வட்டம், சேலம்-உளுந்தூா்பேட்டை சாலை, கள்ளக்குறிச்சி வட்டம், கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைப் பணிகளில், சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு மரங்களை அகற்ற அனுமதி கோரி மாவட்ட பசுமை குழுவிற்கு முன்மொழிவுகள் வரப்பெற்றுள்ளன.

சாலை அகலப்படுத்தும் பணிக்கு ஒரு மரத்தை அகற்றும்போது, அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பராமரிக்க துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பசுமை பரப்புகளை அதிகரிக்க, பசுமை குழு மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளா் க.கு.நாகராஜன், திருக்கோவிலூா் நகராட்சி ஆணையா் திவ்யா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.