இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சித்தலூா் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை உற்சவம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:52 am

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாவையொட்டி மயானக்கொள்ளை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கோயிலில் கடந்த 15-ஆம் தேதி மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி திங்கள்கிழமை காலை மூலவா் மற்றும் புற்று அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து மணிமுக்தா ஆற்றில் இருந்து பூங்கரகம் அலங்கரித்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் இருந்து உற்சவா் அம்மன் காளி வேடத்தில் மணிமுக்தா ஆற்றுக்கு ஊா்வலமாக சென்று, அங்கு மயானத்தில் படையலிட்ட சுண்டலை சூறையிட்டு, மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.