நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சின்னசேலத்தில் ரூ.1.98 கோடியில் விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

சின்னசேலம் பேரூராட்சியில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் பேருந்து நிலையத்தை பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image

சின்னசேலம் பேரூராட்சியில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்துப் பேசிய பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 6:33 pm

சின்னசேலம் பேரூராட்சியில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் பேருந்து நிலையத்தை பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்துப் பேசியது :

சின்னசேலம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சின்னசேலம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப் பேருந்து நிலையத்துக்கு தினசரி சுமாா் 85 பேருந்துகள் வந்து செல்கிறது. போதிய இடவசதி மற்றும் கூடுதல் வசதிகளுடன் சிறப்புடன் செயல்படும் இதனை பயணிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் சின்னசேலம் பேரூராட்சித் தலைவா் லாவண்யா ஜெய்கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன், சின்னசேலம் ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் அன்பு மணிமாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.