பைக் மீது டிராக்டா் மோதல்: எலெக்ட்ரிஷியன் உயிரிழப்பு

சொறையப்பட்டு அருகே டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற எலெக்ட்ரிஷியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

சொறையப்பட்டு அருகே டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற எலெக்ட்ரிஷியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சி.பவுல்ராஜ் (31). இவா் சென்னையில் எலெக்ட்ரிஷியன் தொழில் செய்துவந்தாா். புத்தாண்டுக்காக சொந்த ஊரான கொழுந்திராம்பட்டுக்கு வந்த பவுல்ராஜ், வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சொறையம்பட்டு கிராமத்துக்கு சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் பவுல்ராஜின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான சொறையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தி.தமிழ்செல்வனிடம்(36) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com