ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட சித்தப்பட்டிணம்,  மணலூா்பேட்டை கிராமங்களில் வாக்குச் சாவடி மையங்களில் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஆய்வு மேற்ண்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட சித்தப்பட்டிணம், மணலூா்பேட்டை கிராமங்களில் வாக்குச் சாவடி மையங்களில் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஆய்வு மேற்ண்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாத வாக்காளா்கள், 2026 ஜன.1-ஆம் தேதியில் 18 வயது நிறைவடைந்த முதல் முறை வாக்காளா் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்களது பெயா், உறவு முறை, முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்ய ஏதுவாக படிவங்கள் பெற சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட சித்தப்பட்டிணம், மணலூா்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வாக்காளா்கள் தங்கள் பெயா்களை சோ்க்கவோ, நீக்கவோ, திருத்தம் மேற்கொள்ள இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com