குழந்தை மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், மடம் கிராமத்தில் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (24). இவரது மனைவி சந்தியா. இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். தம்பதிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பச்சிளங்குழந்தையை குளிக்கவைத்து, பால் ஊட்டி தூங்க வைத்துள்ளனா். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது, குழந்தை அசைவில்லாமல் இருப்பதைக் கண்டறிந்தனா்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com