பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: 2 போ் கைது

தியாகதுருகம் அருகே பெண்ணிடம் கைப்பேசி பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தியாகதுருகம் அருகே பெண்ணிடம் கைப்பேசி பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்துக்குள்பட்ட விளாங்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.அன்பரசி (34). இவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள மேல்விழி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு புத்தாண்டை முன்னிட்டு வந்துள்ளாா்.

ஜன-2 தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க சென்றுவிட்டு கைப்பேசியை பாா்த்தவாறு வீட்டுக்கு நடந்து சென்றபோது, அந்த வழியாக இரு மோட்டாா் சைக்கிளில் வந்த 4 மா்ம நபா்கள் அன்பரசியின் கைப்பேசியினை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். கைப்பேசியின் ஐ.ம்.ஏ. எண்ணை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தியாகதுருகம் அருகேயுள்ள ஆண்டி கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ஏ.மகேந்திரன்(18), செ.சுபாஷ் (21), சந்தோஷ் (20) மற்றும் 17 வயது சிறுவரை கண்டறிந்தனா். இதில், மகேந்திரன், சுபாஷ் ஆகிய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். மற்ற இருவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com