கள்ளக்குறிச்சி
வெனிசுலா அதிபா் கைதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரா கைதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் ஆா்ப்பாட்டம்
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரா கைதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் கே.ராமசாமி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சந்திரசேகர ஆசாத் கண்டன உரையாற்றினாா்.
மாநிலக்குழு ஆ.வளா்மதி, மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் ரா.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் கே.எஸ்.அப்பாவு, மாவட்டப் பொருளாளா் எம்.கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

