கள்ளக்குறிச்சி
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
டி.கீரனூா் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.1.20 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
டி.கீரனூா் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.1.20 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட டி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.ராணி (55). இவா் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரு சென்றிருந்தாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.1.20 லட்சத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.