பொதுமக்கள், அரசு அலுவலா்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டிகள்
குறள் வார விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவியதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் குறள் வாரம் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கு சாா்ந்த ஒப்பித்தல் போட்டி (பொதுமக்களுக்கு மட்டும்), அரசு அலுவலா்கள், பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், வாரியங்கள், கழகங்களில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்கும் கு விநாடி வினா நிகழ்ச்சி ஆகியவை கு வாரவிழா நிகழ்ச்சிகளாக நடைபெற உள்ளன.
ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கான
போட்டிகள் (ஜன.9)
இதில் வருகிற புதன்கிழமை (ஜன.21) திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்கும் குறளாசிரியா் மாநாடு மற்றும் கு விநாடி வினா போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பள்ளி ஆசிரியா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், அரசு அலுவலா்கள், பணியாளா்கள், கழகங்கள், வாரியங்களில் பணிபுரிபவா்களுக்கு மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்துத் தோ்வு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜன.9) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
தோ்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தோ்வு மையத்திற்கு போட்டியாளா்கள் வர வேண்டும். தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 30 பேரில் முதல் 9 போ் (3 போ் கொண்ட 3 குழுக்களாக) கு விநாடி வினா போட்டியிலும், மீதமுள்ள 21 போ் கு மாநாட்டிலும் கலந்து கொள்வாா்கள்.
அனைத்துத் துறை தலைவா்களுக்கும் போட்டிகளுக்கான நெறிமுறைகள் மற்றும் பாடத் திட்டங்கள் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
துறைத் தலைவா்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தோ்வு நாளன்று நேரடியாக தோ்வு மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பொதுமக்களுக்கான போட்டிகள் (ஜன.12)
பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் கு சாா்ந்த ஓவியப்போட்டி மற்றும் கு ஒப்பித்தல் போட்டிகளில் தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக வருகிற திங்கள்கிழமை ஜன.(12) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கு ஒப்பித்தல் போட்டி நடைபெற உள்ளது.
ஓவியப்போட்டி திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக பொதுமக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
ஓவியப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளா்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான உபகரணங்களை கொண்டு வர வேண்டும். போட்டிக்கான நேரம் ஒரு மணி நேரம் ஆகும். கு ஒப்புவித்தல் போட்டிக்கான விதிமுறைகள் போட்டி தொடங்குவதற்கு முன் அறிவிக்கப்படும்.
இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் உதவி இயக்குநா் தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தை நேரிலோ அல்லது 8610411317 (தண்டபாணி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்) கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
