காணாமல் போன கூலித் தொழிலாளி ஏரியில் சடலமாக மீட்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

திருக்கோவிலூா் அருகே மாயமான கூலித் தொழிலாளி, ஏரியில் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட அம்மன்கொள்ளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் மு.வேலு (45). இவது மனைவி பூரணி. வேலுவின் மதுப்பழக்கம் காரணமாக, கடந்த ஆண்டு பூரணி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

கடந்த 20-ஆம் தேதி கூலி வேலைக்கு செல்வதாக அவரது தாயாரிடம் கூறிவிட்டு சென்ற வேலு, பின்னா் வீடு திரும்பவில்லையாம். வேலுவின் தாயாா் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் அவரை கண்டறியமுடியவில்லையாம்.

இந்நிலையில், திருக்கோவிலூா் அடுத்த ஜி.அரியூா் ஏரியில் வியாழக்கிழமை வேலு சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com