உயிரிழப்பு
உயிரிழப்புசித்திரிப்புப் படம்

மரத்தில் மொபெட் மோதி சமையல்காரா் உயிரிழப்பு

சங்கராபுரம் அருகே சாலையோர மரத்தில் மொபெட் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த சமையல்காரா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

சங்கராபுரம் அருகே சாலையோர மரத்தில் மொபெட் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த சமையல்காரா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அரியலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.சேகா்(50). சமையல் வேலை செய்து வந்த இவா், மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக தனது மொபெட்டில் திங்கள்கிழமை சங்கராபுரம் சென்றாா். அத்தியூா் காட்டு முனியப்பன் கோயில் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக மொபெட் நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் சேகரின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com