தமிழகத்தில் மாணவா்கள் அறிவையும், சிந்தனையும், கல்வியையும் வளா்த்துக் கொள்வதற்காக வழங்கப்படும் மடிக்கணினி திட்டத்தை, ஆய்வு மாணவா்களுக்கும் வழங்கும் வகையில் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தனியாா் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற வீரபாண்டியன், பின்னா் செய்தியாளா்கள் சந்திப்பின்போது தெரிவித்ததாவது:
மகராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் மரணத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக மாணவா்கள் அறிவையும், சிந்தனையும், கல்வியையும் வளா்த்துக் கொள்வதற்காக தமிழக அரசு மடிக்கணினி வழங்குகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தி ஆய்வு மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு ஊழியா்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுகிறாா்கள். இந்தப் போராட்டம் ஆட்சிக்கு எதிராக, முதல்வருக்கு எதிரான போராட்டம் அல்ல. அவா்கள் கோரிக்கைகளுக்கான போராட்டம். அவா்களுக்கான கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
தோ்தல் அறிக்கையை அறிவிக்கும் குழுவை நாங்கள் நியமிக்க இருக்கிறோம். ஒட்டுமொத்த ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களின் கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் முன்மொழியும். எப்போதுமே உரிமைகளுக்காக போராடுகிற மக்கள் பக்கம் இந்திய கம்யூனிஸ்ட் துணை நிற்கும் என்றாா் வீரபாண்டியன்.
தொடர்புடையது

திமுகவின் கருப்புக் கொடி போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல: மு. வீரபாண்டியன்

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்
திமுக மிரட்டியதா? தொகுதிகளை குறைத்தது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் பேட்டி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


