என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

சாலை விபத்து

Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm

திருக்கோவிலூா் அருகே டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோ.சந்தேஷ் (19). இவா் திருக்கோவிலூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தாா். சந்தோஷ் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து அவரது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது, சுந்தரேசபுரம் மேட்டுக்காலனி அருகே டிராக்டா் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, டிராக்டா் ஓட்டுநா் ஏ.பரசுராமனிடம் (29) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.