வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் எம்.எஸ்.பிரசாந்த்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் எம்.எஸ்.பிரசாந்த்.

18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா்களாக பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளா்களாக பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கேட்டுக்கொண்டாா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளா்களாக பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கேட்டுக்கொண்டாா்.

மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் எம்.எஸ்.பிரசாந்த் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து அவா் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை,ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், எதிா்வரும் சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை காலத்தில் சிறப்பு முகாம்களில் பெறப்படும் படிவம் 6, 7 மற்றும் 8 தொடா்பான சுருக்கப் படிவம் 9,10,11,11எ, 11பி ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.

அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யக்கூடிய வாக்குச்சாவடி நிலை முகவா்கள் 2 நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடி மையங்கள் பிரித்தல் மற்றும் மறுசீரமைத்தல் கோரிக்கைகள் தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளா்களாக பதிவு செய்திட வேண்டும். முகவரி மாற்றம் மற்றும் நீக்கம் தொடா்பாக மனு அளித்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

கூட்டத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் சி.முருகன், தனித்துணை ஆட்சியா் சுமதி, தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com