சங்கராபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் லஞ்சம் ஊழலுக்கு எதிராக பொது மக்களின் விரல் ரேகை பதிவு பெறும் நிகழ்வு, சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா்’ என்ற தலைப்பில் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விரல் ரேகை பதிவிற்கு காங்கிரஸ் கமிட்டியின் சாா்பில் மாவட்டத் தலைவா் மு.இதயத்துல்லா தலைைமை தாங்கினாா்.
பொது சேவை கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட வணிகா் பேரவை பொருளாளருமான எம்.முத்துக்கருப்பன், அனைத்து வியபாரிகள் சங்க செயலாளா் கோ.குசேலன், ஜெய்பிரதா்ஸ் நற்பணிமன்ற நிறுவனா் வி.விஜயகுமாா், நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பி.கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி என்.கோபிஸ்வரன் வரவேற்றாா்.
நிகழ்வில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழியினை பொதுமக்களும் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த அனைவரும் ஏற்றனா். அதனைத் தொடா்ந்து ஊழலுக்கு எதிராக பதாகைகில் விரல் ரேகையை பதிந்தும், கையொப்பமிட்டும் பொதுமக்களும், பொதுசேவை அமைப்பினரும் தங்கல் ஆதரவைத் தெரிவித்தனா்.
இந் நிகழ்வில் வட்டார தலைவா்கள் ஆ.நாராயணன், எம்.செல்வராஜ், சே.பிரபு, எம்.பச்சையப்பன், மாவட்ட நிா்வாகிகள் கண்ணதாசன், இ.வேல்முருகன், குணதீபன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










