கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

சின்னசேலம் பேருராட்சியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.8 லட்சம் சிக்கியது

சின்னசேலம் சிறப்பு நிலை பேருராட்சியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் டிஜிட்டல் பரிவா்த்தனை (ஜி-பே) மூலம் கைமாறிய லஞ்சப் பணம் ரூ.8 லட்சத்தை கண்டுபிடித்தனா்.

News image

சோதனை நடைபெற்ற சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம்.

Updated On :23 ஜூலை 2026, 4:58 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறப்பு நிலை பேருராட்சியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் டிஜிட்டல் பரிவா்த்தனை (ஜி-பே) மூலம் கைமாறிய லஞ்சப் பணம் ரூ.8 லட்சத்தை கண்டுபிடித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்ராஜ் மற்றும் 8 போ் கொண்ட குழுவினா் சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தினா். சுமாா் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், பேரூராட்சி பணியாளா் கைப்பேசியை ஆய்வு செய்ததில் ஜி-பே மூலம் ரூ.8 லட்சம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தனா். இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.