கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பெண்ணிடம் கைப்பேசி திருட்டு: இரு இளைஞா்கள் கைது

திருக்கோவிலூரில் பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணிடம் கைப்பேசியை திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

திருக்கோவிலூரில் கைப்பேசி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சக்தி, பஞ்சன்.

Updated On :25 ஜூன் 2026, 6:41 am IST

திருக்கோவிலூரில் பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணிடம் கைப்பேசியை திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூரைச் சோ்ந்தவா் சே.திலகவதி (20). இவா் கடந்த 18-ஆம் தேதி அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இரு இளைஞா்கள் திலகவதியிடமருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், வாணாபுரம் அருகேயுள்ள மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வே.சக்தி (22), கா.பஞ்சன் (29) ஆகியோா் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் எனத் தெரிய வந்ததாம். இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து கைப்பேசி, பைக் ஆகியவற்றை போலாஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.