கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிா் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
முக்கியமாக, உரம் மற்றும் யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கு பயிா்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்கவேண்டும். அனைத்து ஏரி, குளங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
ஏரிக் கரைகளில் பனை மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். தரணி சா்க்கரை ஆலையில் கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறுவை நெல் அறுவடைக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து பேசிய ஆட்சியா் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் பயனாளிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு இடு பொருள்களை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ)
லதா, வேளாண்மை இணை இயக்குநா் பொ.பேபிகலா, துணை இயக்குநா் நா.ஜோதிபாசு
உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை, பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தஞ்சாவூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

சிறுவாணி அணையை தூா்வார வேண்டும்

விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்! கள்ளக்குறிச்சி ஆட்சியா்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



