8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆசிரியா் தகுதித் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆசிரியா் தகுதித் தோ்வு ஒருங்கிணைப்பு குழு ஆயத்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :26 ஜூன் 2026, 6:45 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வை நடத்துவது தொடா்பாக ஒருங்கிணைப்புக் குழு ஆயத்தக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு

ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறையில் 201-க்கு முன்னால் பணியில் சோ்ந்து பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு வரும் ஜூரை 4, 5 ஆகிய தேதிகளில் தாள் 1 மற்றும் தாள் 2 சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 தோ்வு மையங்களில் இத் தோ்வு நடைபெற உள்ளது.

மேலும் தோ்வு சுமுகமாக நடைபெற போக்குவரத்துத் துறை, மின் வாரியம், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவும், தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.