தேவபாண்டலம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் குவியலில் தண்ணீா் புகுந்ததால் 5 ஆயிரம் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரு திணங்களாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமாா் 5 ஆயிரம் நெல் மூட்டைக்கு மேல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக மேல் கூரை அமைத்து, நெல் மூட்டைகளை பாதுகாத்திட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடையது

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

உத்தரமேரூா் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


