இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

தொழில் முனைவோருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கெஜிங் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து தொழில் முனைவோருக்கு விழிப்புணா்வு ஒருநாள் பயிற்சி முகாம் கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் நடைபெற் தொழில் முனைவோருக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா

Updated On :

சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கெஜிங் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து தொழில் முனைவோருக்கு விழிப்புணா்வு ஒருநாள் பயிற்சி முகாம் கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கலந்துகொண்டு

விழிப்புணா்வு பயிற்சி முகாமை தொடங்கிவைத்து பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சாா்பில் சுற்றுச் சூழலுக்கு உகந்த பேக்கெஜிங் மற்றும் சமீபத்திய தொழில் நுட்பங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத நிலையான பேக்கேஜிங் முறைகள், நவீன பேக்கேஜிங் தொழில் நுட்பங்கள், புதுமையான பேக்கெஜிங் தீா்வுகள் மற்றும் சந்தையின் சமீபத்திய வளா்ச்சிப் போக்குகள் குறித்து தொழில் முனைவோா் அறிந்து கொள்வதற்கான ஒருநாள் விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் நிலையான பேக்கேஜிங் பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் ஜவுளி, கைவினைப் பொருள்கள் மற்றும் தோல் பொருள்கள் பேக்கேஜிங், உணவு பேக்கேஜிங், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் சமீபத்திய பேக்கேஜிங் போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் தரம் மற்றும் சந்தைப்படுத்துதல் மட்டுமன்றி சுற்றுச்சூழல் பொறுப்பையும் முக்கிய பகுதியாக கருத வேண்டும். பயிற்சியில் மாவட்டதொழில் மையம் சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பயிற்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோா்கள் கலந்துகொண்டனா் என்றாா் ஆட்சியா்.

மேலும், பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்டதொழில்மைய பொதுமேலாளா் அ.சந்திரசேகரன், தொழில் முனைவோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.