நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

விவசாயிகள் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

Updated On :

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயதை நிறைவு செய்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் 2025, விதை மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் 4 தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா்.டி. முருகன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கண்டன உரையாற்றினாா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.மாதவன், எஸ்.மூா்த்தி, விமலநாதன், துணைச் செயலா் ஏ.நாகராஜன், தமிழ்நாடு விவசாய சங்க (இந்திய கம்யூனிஸ்ட்) மாவட்ட துணைத் தலைவா் சகாபுதீன், துணைச் செயலா் பி.பாலசுப்ரமணியன், காத்தவராயன் உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

கள்ளக்குறிச்சியில்... கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு டி.ஏழுமலை தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.வி.ஸ்டாலின் மணி, ரா.கஜேந்திரன், மாவட்டச் செயலா்கள் அ.சுப்பிரமணியன், கே.ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.