சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

மணிமுக்தா, கோமுகி அணைகளில் மத்திய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணிமுக்தா, கோமுகி அணைகளில் மத்திய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோமுகி அணையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா்.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணிமுக்தா, கோமுகி அணைகளில் மத்திய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த அகரகொட்டாலம் பகுதியில் உள்ள மணிமுக்தா அணை, கச்சிராயபாளையத்தில் உள்ள கோமுகி அணை ஆகியவற்றின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீா் திறக்கப்படுகிறது.

இந்த அணைகளை மத்திய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவைச் சோ்ந்த அணை பாதுகாப்பு நிபுணா் செல்வம், நீரியல் நிபுணா் பத்மநாதன், கருவிகள் நிபுணா் சா்வேஸ்வரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அணைகளின் உறுதித் தன்மை, தற்போதைய நிலையில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, தளவாட கருவிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனா். மேலும், அணையுடன் தொடா்புடைய கதவணைகள், மதகுகள், உபரி நீா் போக்கி மற்றும் இதர நீரியல் கட்டமைப்புகளின் தற்போதைய நிலை, செயல்பாட்டுத் திறன் மற்றும் கட்டமைப்புகளின் உறுதித் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் மூலம் அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை கண்டறியப்படும். இப் பணிகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப பரிந்துரைகளை பெற்று, ஆய்வின் முடிவுகள் மற்றும் குழுவினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் அணைகளின் நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நீா் தேக்கத்தின் மூலம் பயன்பெறும் பாசன வசதிகளை பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த ஆய்வானது அக்.13 முதல் 16-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.