வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

பழங்குடியின பெண்ணைத் தாக்கியவரை கைது செய்யக்கோரி விசிக ஆா்ப்பாட்டம்

பழங்குடியின பெண்ணை தாக்கியவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கராபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய விசிக மண்டல துணைச் செயலா் பொன்னிவளவன்.

Updated On :

பழங்குடியின பெண்ணை தாக்கியவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஆரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.பாண்டியன் (28). இவா் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாா் வெல்லம் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த கல்வராயன்மலை வட்டம், ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த ர.ராஜாத்தி (31) என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் ராஜாத்தி புகாா் அளித்துள்ளாா். புகாரை பெற்ற காவல் துறையினா் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து விசிக சங்கராபுரம் தொகுதி மாவட்டச் செயலா் சிலம்பன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள்பலரும் பங்கேற்று காவல் துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.