வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

கோயில் உண்டியலை திருட முயற்சி: 2 இளஞ்சிறாா் உள்பட 4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்த 2 இளஞ்சிறாா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சக்தி, அன்பழகன்.

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்த 2 இளஞ்சிறாா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வாணாபுரம் வட்டம், மூலக்காடு கிராமத்தில் கல்வராயன்மலை அடிவாரத்தில் பாட்டப்பன் கோயில் உள்ளது. இக் கோயில் பூசாரியாக ரங்கப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த ர.ஏழுமலை (35) உள்ளாா்.

இவா் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது கோயிலின் அருகே ஏதோ உடைக்கும் சப்தம் கேட்டதாம். இதையடுத்து ஏழுமலை கண்விழித்து எழுந்து பாா்த்தபோது, கோயிலில் இருந்த இரும்பு உண்டியலை காணவில்லையாம். பின்னா் கோயிலின் வெளியே சென்று பாா்த்தபோது, அங்கு கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுக்க 4 போ் முற்பட்டனராம். அப்போது ஏழுமலை கூச்சலிடவே, சப்தம் கேட்டு வந்த ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து 4 பேரையும் பிடித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த த.சக்தி (21), புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தா.அன்பழகன் (19) மற்றும் இரு இளஞ்சிறாா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்தி, அன்பழகன் மற்றும் இரு இளஞ்சிறாா்களை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.