புதுவையில் ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் 11 ஆயிரம்

புதுச்சேரி, செப். 11:  புதுச்சேரியில் சுமார் 11 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளில் சிக்கியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையின் நோய்த் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்துறை
புதுவையில் ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் 11 ஆயிரம்

புதுச்சேரி, செப். 11:  புதுச்சேரியில் சுமார் 11 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளில் சிக்கியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜிப்மர் மருத்துவமனையின் நோய்த் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எம். பாலசுதர்சனன் ஆய்வு நடத்தி, அந்த அறிக்கையை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

இது குறித்து "தினமணி' நிருபரிடம் டாக்டர் பாலசுதர்சனன் கூறியது:

ஒவ்வொரு வயதிலும் குழந்தைகள் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்ற வரையறை இருக்கிறது. அதன் அடிப்படையில் இருக்க வேண்டிய எடையில் 80 சதவீதத்துக்கு மேல் இருந்தால், குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்துடன் இருப்பதாக அர்த்தம்.

70-லிருந்து 80 சதவீதம் எடை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவு கிரேடு-1 எனவும், 60-லிருந்து 70 சதவீதம் எடை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவு கிரேடு-2 எனவும், 60 சதவீதத்துக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவு கிரேடு-3 எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் கிரேடு-3-ல் உள்ள குழந்தைகளுக்கு சில நேரங்களில் இறப்புகூட நேரிடலாம்.

ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சராசரியாக ஆண்டுக்கு 11 வாரம் நுரையீரல் தொடர்பான நோய்கள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஊட்டச்சத்து கிரேடு-3 குழந்தைகள் தற்போது 6 பேர் மட்டும் உள்ளனர். இங்குள்ள அங்கன்வாடிகள் மூலம் கொடுக்கப்படும் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வாயிலாக பெரும்பாலான குழந்தைகள் இப் பிரச்னையிலிருந்து மீண்டு வந்துள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அங்கன்வாடிகளில் 26,887 குழந்தைகள் உள்ளனர். இக் குழந்தைகள் பராமரிப்புக்காக அரசு ரூ. 3.04 கோடி நிதி ஒதுக்குகிறது என்றார் டாக்டர் பாலசுதர்சனன் (படம்).

பரிந்துரைகள்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை கிரேடு-2 அளவில் 1514 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரேடு-1 அளவில் 9411 குழந்தைகள் உள்ளனர். கிரேடு 3 அளவில் 6 குழந்தைகள் உள்ளனர். ஆக மொத்தம் சுமார் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

 ஊட்டச்சத்து கிரேடு-2 குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு அங்கன்வாடிகளில் கொடுக்கப்படும் உணவை இரட்டிப்பாக்கினால் பிரச்னையைப் பெருமளவில் தீர்க்க முடியும். இதற்கு கூடுதலாக

ரூ. 2.07 கோடி தேவைப்படும்.

பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா போன்ற மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் அதிகம். அதனால் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கும் எங்கள் பரிந்துரையை அனுப்ப உள்ளோம் என்றார் டாக்டர் பாலசுதர்சனன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com