

புதுச்சேரி, மே 26: ஒரு சில வயல்களில் வரப்பில் கால் வைக்க இடம் இருக்காது. நடக்கும்போது வழுக்கி விழுவார்கள். இப்படி இல்லாமல் வரப்பு அகலமாக இருந்தால்தான் பயிர் பாதுகாப்புக்கும், விவசாயியின் பாதுகாப்புக்கும் நல்லது.
÷மனிதன் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை முடி வெட்டிக் கொள்வது போன்று ஒவ்வொரு சாகுபடிக்கும் முன்பாக வரப்பைச் சரி செய்ய வேண்டும். வயலுக்கு அழகு சேர்ப்பது வரப்புதான்.
÷வரப்பில் புல், பூண்டுகள் இருக்கக் கூடாது. இவை இருந்தால் பயிரைத் தாக்கும் பூச்சிகளுக்கு மாற்று உணவாக இது மாறிவிடும். புல், பூண்டுகளை அகற்றிவிட்டால் வரப்பில் பூச்சி உட்காராது. பயிரையும் தாக்காது.
÷வயல் மற்றும் வரப்பில் நிறைய புல் இருந்தால் அந்த வயலில் தூவும் உரங்கள் பயிருக்கு மட்டும் செல்லாமல் வரப்பில் உள்ள புல், பூண்டுகளுக்குச் செல்லும்.
÷புல், பூண்டு வயல், வரப்பில் அதிகம் இருந்தால் பயிர் வளர்ச்சி எதிர்பார்க்கும் அளவுக்கு வராது. பல வகையான பூச்சிகள் வந்து தாக்கும். இதனால் பயிர்கள் மடியும் அபாயம் ஏற்படும்.
÷அதனால் மகசூல் பெருமளவில் பாதிக்கும். வயலைப் பார்க்கவும் அழகாக இருக்காது. பயிருக்குத் தேவையான உரம், நீர் நேரத்துக்குக் கிடைத்தால்தான் நல்ல மகசூல் கிடைக்கும். ÷களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பர்.
÷களை எடுத்தல்
÷வரப்பில் களை, புல், பூண்டுகள் இருந்தால் என்ன ஆகும் என்பதை புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் நிலைய பூச்சியல்துறை நிபுணர் என். விஜயகுமார் விவரிக்கிறார்:
÷வரப்பில் இருக்கும் புல் பூண்டையும் அகற்ற வேண்டும். முக்கியமாக களை, புல் பூண்டுகள் இருந்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகமாக வரும். எல்லா பயிரையும் தாக்கும் மாவுப் பூச்சி, கரும்பைத் தாக்கும் வெண்கம்பளபஞ்சு அசுவனி பூச்சிகள், களை அதிகமாக இருந்தால் வரும். இதனால் இனப்பெருக்கம் அதிகமாகி பயிரைத் தாக்கும்.
÷களை அதிகமாக இருந்தால் பயிரில் நன்மைத் தரும் பூச்சிகள் உதாரணமாக குளவிகள், பொறி வண்டுகள், தரை வண்டுகள் போன்றவை இறக்க நேரிடும். நன்மை தரும் பூச்சிகள் அதிகம் இருக்க வேண்டும்.
÷எந்தப் பயிர் சாகுபடி செய்யும்போதும் வாய்க்கால், வரப்பு, வஞ்சி ஆகிய பகுதிளில் உள்ள களைகளை நீக்கி அந்த இடத்தில் உளுந்து அல்லது பச்சை பயிர் செடிகளை வளர்க்க வேண்டும். இச் செடிகளில் நன்மை தரும் பூச்சிகள் அதிகம் இருக்கும்.
÷இந்தச் செடிகளைச் சாகுபடி செய்தால் வீட்டுக்கு உபரி லாபமும் கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்தச் செடிகளில் உட்கார்ந்து நன்மை தரும் பூச்சிகள் அதிகமான எண்ணிக்கையில் உற்பத்தியாகும்.
÷அதிகமாக இனப்பெருக்கம் வயலில் இருப்பதால் தீமைத் தரும் பூச்சிகள் பயிரைத் தாக்கினாலும் நன்மை தரும் பூச்சிகள் தாக்கி அழிக்கும். இதனால் சுற்றுச்சூழ் சமச்சீர் நிலை உருவாகும். இதற்கு ஆங்கிலத்தில் ஆஐஞபஐஇ ஆஅகஅசஇஉ என்று பெயர்.
÷வரப்புகளில் புல், பூண்டுதானே இருக்கிறது என்று அலட்சியம் வேண்டாம். புல், பூண்டுகளை அகற்றிவிட்டு வரப்பு ஓரங்களில் மஞ்சள் வண்ண பொறி வைக்க வேண்டும். புல், பூண்டில் இருக்கும் தீமை பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.