கணிப்பொறியில் தமிழ் பயன்பாடு விழிப்புணர்வு முகாம்ப
By புதுச்சேரி, | Published On : 18th February 2013 12:58 AM | Last Updated : 18th February 2013 12:58 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் கணிப்பொறியில் தமிழ் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் வீர.முருகையன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் தலைவர் வ.சபாபதி முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா.சுகுமாரன் விளக்கினார்.
முகாமில் தமிழில் இயங்குதளங்கள், தட்டச்சு மென்பொருள் நிறுவல் மற்றும் பயன்பாடு, கைப்பேசியில் தமிழ், தமிழில் இணைய உலாவிகள், தமிழ் எழுத்துக்களின் குறியீட்டு முறைகள், தமிழில் மின்னஞ்சல், அரட்டை, வலைப்பதிவுகளை தொடங்குதல், திரட்டிகளின் பயன்பாடு, சமூக வலைத்தளங்கள், தமிழில் மின்நூல் உருவாக்குதல், கட்டற்ற மென்பொருள்கள், தமிழில் கிடைக்கும் பல்வேறு மென்பொருள்கள் ஆகியவை குறித்து கருத்துரை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழா என்ற தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை மின்துறை அமைச்சர் தி.தியாகராஜன் வெளியிட்டார்.
அதனை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மென்பொருள் வல்லுநர் க.அருணபாரதி, பேராசிரியர் நாக.இளங்கோ, திரட்டி நிறுவனர் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில்
பேசினர்.