அறிவுடைநம்பி சுவடியியல் மையத் தொடக்க விழா

முதுமுனைவர் ம.சா.அறிவுடை நம்பி சுவடியியல் மைய தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

முதுமுனைவர் ம.சா.அறிவுடை நம்பி சுவடியியல் மைய தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

புதுவை வெங்கட்டா நகர் செந்தில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புதுவை பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் வ.நாராயணசாமி தலைமை வகித்தார். மையத்தின் செயலர் செல்வகணபதி வரவேற்றார்.

புதுவை பல்கலைக்கழக தமிழியற்புல பேராசிரியர் அறிவுநம்பி, சுவடியல் மையத்தின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். புதுவை இந்திரா காந்தி கல்லூரி முதல்வர் மாதவன், அறிவுடைநம்பியின் முதலாமாண்டு நினைவேந்தல் உரையாற்றினார்.

அங்கையற்கண்ணி மையத்துக்கான நுôல்களை வழங்கினார். மைய நிர்வாகிகள் சார்பில் கோபிராமன் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சுவடியியல் தொடர்பான பயிலரங்கத்தை கல்லூரிகளில் நடத்துவது, முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி நினைவு சுவடியியல் நினைவகம் அமைப்பது என்று நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டது. முடிவில் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரிப் பேராசிரியர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com