கோயில் நிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை

கோயில், குத்தகை, புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என புதுச்சேரி மாநில விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

கோயில், குத்தகை, புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என புதுச்சேரி மாநில விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 விவசாயிகள் சங்கம் சார்பில், புதுவை மாநில விவசாயிகளின் நெருக்கடியும்-தீர்வுகளும் என்ற தலைப்பில் வில்லியனூரில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு கெளரவத் தலைவர் மாசிலாமணி, தலைவர் ரவிஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் கலியமூர்த்தி, செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் கீதநாதன் வரவேற்றார்.
 இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் விசுவநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், பி.கே.எம்.யூ. தேசியச் செயலாளர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் முருகன், புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.
 குத்தகை இடம், புறம்போக்கு இடம், கோயில் இடம் ஆகியவற்றில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி மாதம் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும்
 பாண்லே கால்நடை விவசாயிகளிடம் ஒரு லிட்டர் பாலை ரூ.26க்கு கொள்முதல் செய்து ரூ.100 வரை சம்பாதித்து வருகிறது, மேலும், கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பாலை ரூ.42க்கு கொள்முதல் செய்து வருகிறது. எனவே, புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.45 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com