பிப்.12-இல் புதுவை தமிழ்ச் சங்கத் தேர்தல்

புதுவை தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தல் வரும் பிப்.12-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தல் வரும் பிப்.12-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதுவை தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்களின், பொதுக்குழுக் கூட்டம் வில்லியனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார்.
 செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், வரவு, செலவு கணக்குகளை படித்து, பொதுக்குழு ஒப்புதல் வழங்கிய பிறகு, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய, தேர்தல் ஆணையராக முன்னாள் நீதிபதி சேதுமுருகபூபதியை நியமித்து பொதுக் குழுவில் தீர்மானித்தனர்.
 பின்னர், நிறைவேற்றிய தீர்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழறிஞர் வ.செ.குழந்தைசாமி, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, கவிஞர் இன்குலாப், புதுவை தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுவை தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவிற்கு 11 உறுப்பினர்களை, வரும் பிப்.20-க்குள் தேர்தல் நடத்தி தேர்வு செய்து தருமாறு, தேர்தல் ஆணையர் சேதுமுருகபூபதியிடம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழுவுக்கும், ஆட்சிக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
 இதனையடுத்து, தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் முருகபூபதி கூறியது: புதுவையில் வரும் பிப்.12-இல் தமிழ்ச் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
 தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் கோவிந்தராசு நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com