கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட போலீஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்

பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் போலீஸார் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

Updated On :5 நவம்பர் 2018, 8:53 am IST

பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் போலீஸார் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
 தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை (நவ. 6) கொண்டாடப்படும் நிலையில், காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 மருத்துவமனைகள், தனியார் மருத்துவ விடுதிகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், வருவாய்த் துறையால் சப்தமில்லாத பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்தது.
 இந்த நிலையில், பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்குமாறு ஒதியஞ்சாலை காவல் நிலைம் சார்பில், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கண்டாக்டர் தோட்டம், வாணரப்பேட்டை, தாவீதுபேட்டை, ராசு உடையார் தோட்டம் ஆகிய இடங்களில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் கீர்த்தி, நாராயணசாமி உள்ளிட்ட போலீஸார் இந்தப் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, போக்குவரத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு ஆங்காங்கே அறிவுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.