புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியை தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி வானரப்பேட்டை ராசு உடையார்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (22). கார் ஓட்டுநரான இவர், அண்மையில் நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் உப்பளம் தொகுதி செயலராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர், தனது நண்பர் செல்வத்தின் காரை காந்தி வீதி தில்லை மேஸ்திரி சந்திப்பில் உள்ள அவரது வீட்டின் அருகே நிறுத்த சனிக்கிழமை இரவு சென்றார். அப்போது, அந்தப் பகுதியில் 2 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனராம். ஹானஸ்ட்ராஜ் தான் வண்டியை நிறுத்த வேண்டி இருப்பதால் ஓரமாக நிற்கும்படி அவர்களிடம் கூறினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இருவரும் ஹானஸ்ட்ராஜை சரமாரியாக செங்கல் உள்ளட்ட பொருள்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த ஹானஸ்ட்ராஜ் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஹானஸ்ட்ராஜ் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சக்தி நகரைச் சேர்ந்த ஆல்வினை (38) கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மணவாளனை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திப்பு!

ராம் சரணின் பெத்தி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 4% உயர்வு!

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

