தேர்தல் செலவினக் கணக்குகளை வேட்பாளர்கள் ஏப். 4, 10, 17 ஆகிய மூன்று நாள்களில் செலவினப் பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செலவினங்களைக் கண்காணித்தல் தொடர்பான அறிவுரைகளின்படி, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய செலவினப் பார்வையாளர்கள், வேட்பாளர்களால் பராமரிக்கப்படும் தேர்தல் செலவினக் கணக்குகளைக் குறைந்தது மூன்று முறை பார்வையிட்டு, குறைபாடுகள் குறித்த குறிப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.
அதன்படி, புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் பராமரிக்கப்படும் தேர்தல் செலவின கணக்குகளை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய செலவினப் பார்வையாளர்கள் அசிம்குமார் சக்ரபார்த்தி, அஜித் டேன் ஆகியோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் ஏப்ரல் 4, 10, 17 ஆகிய மூன்று நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட உள்ளனர்.
எனவே, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் தேர்தல் செலவின கணக்குகளை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்
பட்டுள்ளது.