நவோதயா பள்ளியில் ஏப். 6-இல் 6 ஆம் வகுப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வு
By DIN | Published On : 01st April 2019 09:55 AM | Last Updated : 01st April 2019 09:55 AM | அ+அ அ- |

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ், காலாப்பட்டில் இயங்கி வரும் ஜவஹர் நவோதயா பள்ளியில் 6 -ஆம் வகுப்பு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகிற
ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் முதல்வர் பொன். ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி ஜவகர் நவோதயா பள்ளியில் வருகிற கல்வியாண்டில் (2019-20) ஆறாம் வகுப்பில் சேர்வதற்கான தெரிவுநிலைத் தேர்வு ஏப்ரல் 6- ஆம் தேதி புதுவை மாவட்டத்தில் உள்ள 6 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
பதிவு செய்த மாணவ, மாணவிகளுக்கான நுழைவுச்சீட்டு புதுவை கல்வித் துறை மூலமாக அவர்கள் பயிலும் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லையெனில், ஜவகர் நவோதயா பள்ளியின் தொலைபேசி எண் 0413 - 2655133 -ஐ அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இணையதளம் வழியாக விண்ணப்பித்து பதிவு செய்த மாணவ, மாணவிகள் நவோதயா வித்யாலா சமிதியின் http://avsadmissionclasssix.in/nvs6reg/ homepage என்ற இணையதளம் வழியாக தங்களது பதிவு எண், பிறந்த தேதியை பதிவிட்டு, நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.