மகளிர் காங்கிரஸார் பேரணியில் முதல்வர்
By DIN | Published On : 17th April 2019 06:49 AM | Last Updated : 17th April 2019 06:49 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் மகளிர் காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட இரு சக்கர வாகனப் பேரணியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று உற்சாகப்படுத்தினார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மகளிர் காங்கிரஸார் புதுச்சேரி முழுவதும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
இந்த பிரசாரம் முதலியார்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பாரதி பஞ்சாலை அருகே தொடங்கியது. இதில் தேர்தல் கண்காணிப்பாளர் மாலதி, மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பிரேமலதா, பொதுச் செயலர் விஜயகுமாரி உள்பட 100-க்கும் மேற்பட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திறந்த ஜீப்பில் பிரசாரம் மேற்கொண்டிருந்த முதல்வர் நாராயணசாமி, முதலியார்பேட்டையில் மகளிர் காங்கிரஸாரின் இரு சக்கர வாகன பிரசாரத்தை பார்த்தவுடன், ஜீப்பில் இருந்து இறங்கி இரு சக்கர வாகன பேரணியில் சிறிது தொலைவு சென்று உற்சாகப்படுத்தினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...