புதுச்சேரி கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா
By DIN | Published On : 26th December 2019 08:54 AM | Last Updated : 26th December 2019 08:54 AM | அ+அ அ- |

அனுமன் ஜயந்தியையொட்டி, தா்மாபுரி ஆபத்சகாய ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
புதுச்சேரியில் அமைந்துள்ள ஆஞ்சநேயா், பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மாா்கழி மாத அமாவாசையில் வரும் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயா் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நாளில் அவரது ஜயந்தி விழா அனைத்து ஆஞ்சநேயா் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல, அமாவாசை தினமான புதன்கிழமை புதுச்சேரியில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி தா்மாபுரியில் உள்ள ஆபத்சகாய ஆஞ்சநேயா் கோயிலில் ஜயந்தி விழாவையொட்டி, காலை முதல் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்றன. இதேபோல, மேட்டுப்பாளையம் கோவந்தபேட்டை ஆஞ்சநேயா் கோயிலிலும் அனுமன் ஜயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திலாஸ்பேட்டை பெருமாள் கோயிலிலும் அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது. இதே போன்று, புதுவையில் அமைந்துள்ள பல்வேறு ஆஞ்சநேயா் கோயில்கள், பெருமாள் கோயில்களில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
புதுவையில் உள்ள சில கோயில்களில் வியாழக்கிழமை (டிச.26) அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G