காரைக்காலில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 04th January 2019 08:58 AM | Last Updated : 04th January 2019 08:58 AM | அ+அ அ- |

காரைக்கால் துறைமுகம் மற்றும் எல் அண்டு டி நிறுவனம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 4) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் துறைமுகம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டம், மேலவாஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் மார்க் துறைமுகம், இந்தியாவின் பிரபல நிறுவனமான எல் அண்டு டி நிறுவனத்துடன் இணைந்து முதன் முறையாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை காரைக்காலில் நடத்துகின்றன.
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தச்சு, கொத்தனார், பிட்டர் ஆகிய 3 பிரிவுகளுக்கு 5 -ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. வரை படித்திருக்க வேண்டும். எலக்ட்ரீஷியனுக்கு 10 -ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. வரை படித்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாமுக்கு வருவோர் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, காஞ்சிபுரம் எல் அண்டு டி நிறுவனத்தில் 3 மாதத்துக்கு தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.