மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் குறித்த ஆயத்த வாயில் கூட்டம்

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, காûக்கால் பிரதேச அரசு ஊழியர் சங்க சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான ஆயத்த வாயிற்கூட்டம், காரைக்கால் மதகடி,

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, காûக்கால் பிரதேச அரசு ஊழியர் சங்க சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான ஆயத்த வாயிற்கூட்டம், காரைக்கால் மதகடி, காமராஜர் நிர்வாக அலுவலக வாயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்தும், 2004 ஜன 1 -க்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட மற்றும் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 26 ஆயிரமாக உயர்த்த வேண்டும், வீட்டு வாடகைப் படியை 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும், எம்ஏசிபி-க்கு  உயர்த்தப்பட்ட தகுதியை ரத்து செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், பஜன்கோவா, புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகம், புதுச்சேரி மின்திறல் குழுமம், அங்கன்வாடி, பாப்ஸ்கோ, பாலிடெக்னிக், பிகேஐடி உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி, பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கும் 7 -ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், 7 -ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.1.2016 முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலுவை தொகைகளை வழங்க வேண்டும், உள்ளாட்சி மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஜன. 8 , 9 தேதிகளில் மத்திய அரசு  ஊழியர் சம்மேளனம் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான ஆயத்த வாயில்கூட்டம், சம்மேளனம் சார்பில் காரைக்கால் மதகடி பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக அலுவலக வாயிலில் நடைபெற்றது.
காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கெüரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ் குணாளன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
வாயிற்கூட்டத்தில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத்தைச் சேர்ந்த அய்யப்பன், ஜோதிபாசு, ஷண்முகராஜ், பிஆர்டிசி ஊழியர் சங்க சுப்புராஜ், பிபிசிஎல் ஊழியர் சங்க கலைச்செல்வம், பஜன்கோவா ஊழியர் சங்க அசோகன், செல்லப்பாண்டியன், ஜீவானந்தம், அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் முத்துலெட்சுமி, பாகீரதி, வாணி, வேளாண்துறை ஊழியர் சங்க தனசேகரன், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர் சங்க ரஞ்சித், அலுவலக செயலாளர் புகழேந்தி, ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் காளிதாஸ், பல்நோக்கு உதவியாளர் ஊழியர் சங்க செல்வம், கான்பெட் ஊழியர் சங்க செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சம்மேளன பொருளாளர் மயில்வாகனன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com