ஆம் ஆத்மி தலைவர் விலகியதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை: துணைத் தலைவர்

ஆம் ஆத்மி கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் ரங்கராஜன் விலகியதால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ஆலடி கணேசன் கூறினார்.


ஆம் ஆத்மி கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் ரங்கராஜன் விலகியதால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ஆலடி கணேசன் கூறினார்.
இதுகுறித்து, சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
புதுவை மாநில ஆம் ஆத்மி தலைவராக இருந்த ரங்கராஜன் கட்சிப் பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, புதுச்சேரியிலேயே அவர் தங்கியிருக்கவில்லை. 
இதனால், புதுவையில் ஆம் ஆத்மியின் செயல்பாடு சிறப்பாக இல்லை. இதுகுறித்து கட்சித் தலைமைக்கு கொண்டு சென்றோம். அப்போது, செயல்படாத தலைவரை மாற்றவும் கோரிக்கை விடுத்தோம்.
இதை ஏற்றுக்கொண்ட தில்லி முதல்வரும், கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் புதுவை மாநிலக் கட்சித் தலைவர் ரங்கராஜனை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்க முடிவு செய்திருந்தார். இதையறிந்து கொண்ட ரங்கராஜன் ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துவிட்டார்.
கட்சியில் இருந்து அவர் விலகியதால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியில் உள்ள நிர்வாகிகள்,  தொண்டர்கள் இப்போதும் கட்சிக்கான களப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார். தலைநகர் தில்லியில் நடைபெறும் நேர்மையான அரசைப் போல, புதுவையில் அமைக்கும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியினர் மக்களை அணுகி சேவையாற்றி வருகிறோம் என்றார் அவர்.
பேட்டியின் போது, கட்சியின் மாநிலச் செயலர் ரவி சீனுவாசன், கொள்கைப் பரப்புச் செயலர் சுந்தர்ராஜன் ஆகியோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com